Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#CricketUpdates : சதம் விளாசினார் புஜாரா!

chatteswara pujara

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் சதமடித்தனர். இந்திய அணியின் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இந்தியா, தனது முதல் இன்னிங்ஸை நேற்று துவங்கியது. நேற்றைய நாள் முடிவில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. இன்று களமிறங்கியது முதல் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, தனது 11-வது சதத்தை விளாசியுள்ளார். விஜய் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஹானே, 14 ரன்களில் அவுட் ஆனார். தேநீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. சட்டீஸ்வர் புஜாரா 109 ரன்களுடனும், கருண் நாயர் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close