Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் ஹசாரே ட்ராஃபி: அரையிறுதியில் தோல்வியடைந்த தோனி அணி

MS Dhoni

விஜய் ஹசாரே ட்ராஃபியின் அரையிறுதி ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியும் மனோஜ் திவாரி தலைமையிலான மேற்கு வங்க அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மேற்கு வங்கம், 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. ஸ்ரிவட்ஸ் கோஸ்வாமி மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரும் மேற்கு வங்கம் சார்பில் சதம் விளாசினர். கேப்டன் மனோஜ் திவாரி 49 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.

330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது ஜார்கண்ட். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களான சவுரப் திவாரி மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜார்கண்ட் சார்பில், தோனி மட்டுமே அதிகபட்சமாக 62 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். எந்த பேட்ஸ்மேனும் நின்று ஆடாததால், ஜார்கண்ட் 288 ரன்கள் எடுத்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இறுதி ஆட்டத்தில், மேற்கு வங்கம் தமிழ்நாடு அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close