Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய சுழலில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியா..!!

3rd test

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் சதமடித்தனர். இந்திய அணியின் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, புஜாரா 202 ரன்கள், சாஹா 117 என விளாசினர். இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவை விட 152 ரன்கள் முன்னிலைப் பெற்றது இந்தியா.

பின்னர், தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 14 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் போல்ட் ஆனார். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பந்து வீச்சாளர் லயன் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

படம்: நன்றி BCCI

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close