Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100-வது டெஸ்ட்டில் இலங்கையை வென்றது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் அணி, தனது 100-வது டெஸ்ட்டில் இலங்கையை வீழ்த்தியது.

Bangladesh beats Srilanka in 100th test

பங்களாதேஷ் அணி தற்போது, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில், இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், கொழும்பில் நடந்தது. இதில், முதல் இன்னிங்ஸில் இலங்கை 338 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சந்திமல், சதம் அடித்தார்.

இதையடுத்து, ஷகிபுல் ஹசனின் சதத்தால், பங்களாதேஷ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 467 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 129 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 319 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால், அதிரடி காட்டி 82 ரன்கள் எடுக்க, 6 விக்கெட்டுகளில் 191 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

இது, பங்களாதேஷ் அணி ஆடிய 100-வது டெஸ்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிபெறும் 9-வது வெற்றி இது. குறிப்பாக, இலங்கைக்கு எதிரான முதல் வெற்றி. அதேபோல இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகளைத் தொடர்ந்து, மூன்றாவதாக ஒரு பெரிய அணியை வீழ்த்திய சாதனையையும் பங்களாதேஷ் நிகழ்த்தியுள்ளது.

மேலும், இதன்மூலம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 1-1 என்று சமன் செய்தது பங்களாதேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close