Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெஸ்ட் ரேங்கிங்கில் கலக்கும் இந்திய வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிக் கொள்வதால், இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுபவர்கள் தர வரிசையிலும் முன்னேற்றம் காணுவர்.

இந்நிலையில், ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 899 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதலாம் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 862 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின், ஜோஷ் ஹேசல்வுட் 842 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற மூன்றவாது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த செத்தேஷ்வர் புஜாரா 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 942 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி 826 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.     

டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close