Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலி தோள்பட்டையில் காயம் : ஆஸிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்ப்பு!

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், தற்போது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில், தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. ஆக, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய  கடைசி 4-வது டெஸ்ட் போட்டி, வருகின்ற மார்ச் 25 அன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இதில் தோள்பட்டை காயம் காரணமாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. முன்னதாக இவர், ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட்டில் ஃபீல்டிங் செய்யும்போது காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இவருக்கான மாற்று வீரராக, ராஞ்சியில் சீராக ரன்களைக் குவித்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்!

 

 

கிளப், டிவிஷன், ஃபர்ஸ்ட் கிளாஸ் எனப் படிப்படியாக முன்னேறி, இந்திய அணிக்குள் நுழையக்கூடிய பழைய ஃபார்முலாவைத் தகர்த்தெறிந்து. ஐபிஎல் டு இந்திய அணி எனும் இப்போதைய லேட்டஸ்ட்டான ரூட் மேப்பைப் பின்பற்றி, இந்திய அணியில் இடம்பிடித்த ஐபிஎல் வைரல் ஸ்டார்களில் ஒருவர்தான், ஸ்ரேயாஸ் ஐயர். 'எப்பேர்ப்பட்ட பந்துவீச்சாளருக்கும் பயப்பட மாட்டார்' என கிரிக்கெட் பிரபலங்களின்  ஒருமித்த பாராட்டைப் பெற்றுள்ள இவர், ஷேவாக் போலவே டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒருநாள் போட்டி பாணியில் ஆடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதனாலேயே ‘யங் வீரு’ எனச் செல்லமாக அழைக்கப்படுகிறார், இந்த 22 வயதே ஆன மும்பை பையன். இவரும் ஷேவாக்கைப்போல ஒரு வலதுகை பேட்ஸ்மேன்தான்.

 

 

இவர், கடந்த 2015 ரஞ்சி சீஸனில் 1,321 ரன்களை அடித்து, தனி ஒருவனாக மும்பை அணியைத் தூக்கி நிறுத்தி, இறுதிப் போட்டியில் சதமடித்து, தனது அணி ரஞ்சி கோப்பையைக் கைப்பற்ற உதவினார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2015 ஐபிஎல் தொடரில், 2.6 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்தத் தொடரில் யுவராஜ், டுமினி போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட்களை ஓரங்கட்டி, சிக்ஸரும் பவுண்டரியுமாக நொறுக்கித்தள்ளி, ஒரே தொடரில் 14 போட்டிகளில் ஆடி 439 ரன்களைக் குவித்தார்!  நடப்பு ரஞ்சி சீஸனில் கூட, மும்பை அணிக்காக 725 ரன்களை இவர் எடுத்ததை இங்கு சொல்லியாக வேண்டும். இப்படி தொடர்ச்சியாக சீராக ரன்களைக் குவித்துவரும் இவர், வங்கதேசம் மற்றும் ஆஸி அணிகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் 91 பந்துகளில் சதமும், 210 பந்துகளில் இரட்டைச் சதமும் விளாசியுள்ளார். விராட் கோலி விலகியுள்ளதால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கிய ரஹானே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close