Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோலி இல்லை... ரஹானே கேப்டன்... ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Rahane

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் இன்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து கோலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  கோலிக்கு பதிலாக அறிமுக வீரர் குல்தீப் யாதவ் களமிறங்குகிறார். மேலும், இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ராஞ்சி டெஸ்ட்டில் களமிறங்கிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. சற்று முன் வரை அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வார்னர் 23, ஸ்மித் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். துவக்க ஆட்டக்காரர் ரென்ஷாவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close