Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபார்முலா-1: செபாஸ்டியன் வெட்டல் 'த்ரில்' வெற்றி!

ஃபார்முலா-1 ஆஸ்திரேலியன் க்ராண்ட் ப்ரிக்ஸில், செபாஸ்டியன் வெட்டல் வெற்றிபெற்றார்.

Sebatial Vettal

கடந்த ஆண்டு நடந்த ஃபார்முலா-1 சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதையடுத்து, ராஸ் பெர்க் ஓய்வுபெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 ரேஸ், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று துவங்கியது. 'ஆஸ்திரேலியன் க்ராண்ட் ப்ரிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த ரேஸில், மெர்சிடீஸ் அணியின் ஹேமில்டன் வெற்றிபெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஹேமில்டன், கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்தார்.  அதேபோல  கடந்த ஆண்டு மூன்றாம் இடம் பிடித்த செபாஸ்டியன் வெட்டலும் முக்கியமான ரேஸராகக் கருதப்பட்டார்.

இன்றைய ரேஸின் துவக்கத்தில், ஹேமில்டன்தான் முன்னிலையில் இருந்தார். ஆனால், ஹேமில்டனை விடாமல் சேஸ்செய்த ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல், வெற்றிபெற்றார். ஹேமில்டனுக்கு இரண்டாவது இடம். மெர்சிடீஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடம் பிடித்தார். முக்கியமாக, கடந்த 2007-க்கு மெல்போர்னில் ஃபெராரி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதேபோல வெட்டலுக்கு மெல்போர்னில் இது இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக அவர் ரெட் புல் அணியில் இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று துவங்கியுள்ள ஃபார்முலா-1 ரேஸ், மொத்தம் 20 சுற்றுகளாக நடைபெறும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close