Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#CricketUpdates: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 248/6

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து, களத்தில் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களான லோகேஷ் ராகுல் மற்றும் செதேஷ்வர் புஜாரா, அரை சதம் விளாசினர். ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

இந்திய விக்கெட் கீப்பர் ரிட்டிமன் சாஹா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், ஆட்ட முடிவின்போது களத்தில் இருந்தனர். 

இதுவரை நடந்த போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒன்றில் வெற்றிபெற்றுள்ளதால், தொடரின் முடிவை நிர்ணயிக்கும் போட்டியாக இது மாறியுள்ளது. எனவே, தங்களுக்கு சாதகமான முடிவுக்காக இரு அணிகளும் முழு பலத்தைப் பிரயோகிக்கும் என்று தெரிகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close