Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரீ-என்ட்ரி கொடுக்கும் மேரி கோம்!

இந்தியாவின் பாக்சிங் புயல் மேரி கோம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Mary Kom

ஐந்து முறை பாக்‌சிங் சாம்பியன், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் தற்போது ராஜ்ய சபா எம்.பி என்று பல்வேறு புகழ்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் மேரி கோம்.

ஆனால், கடந்த ஓராண்டாக அவர் விளையாடாமல் இருந்தார். முன் அவர் ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாகக் கூறி இருந்தார். ஆனால், ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, அவர் ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மேரி கோம், 'நான் பாக்சிங்கை விட்டு விலகவில்லை. இப்போதும், தினசரி நான் பயிற்சி எடுத்து வருகிறேன். நவம்பர் மாதம் நடக்க உள்ள ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் தயாராகி வருகிறேன். இந்திய அணி பதக்கம் வெல்ல எனது பங்களிப்பையும் அளிக்க நான் ஆர்வமாக உள்ளேன். 2020 ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க நாம் தயாராகவில்லை. 2020 ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், தற்போதுவரை அதற்கு மத்திய அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை' என்றார்

.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close