Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரோலினா மரினுக்கு பதிலடி: சாம்பியன் ஆனார் பி.வி. சிந்து!

இந்தியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில்... கரோலினாவை வீழ்த்தி, சிந்து வெற்றிபெற்றார்.

PV Sindhu

இந்தியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டி, இன்று நடந்தது. இதில், இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரியுடன் மோதினார். ஏற்கெனவே இவர்கள் இருவரும் மோதிய ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டி க்ளாசிக் போட்டியாக இருந்ததால், இந்தப் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே சிந்துவின் கையே ஓங்கியது.

ஒலிம்பிக்கில் ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், சிந்து ஆக்ரோஷமாக விளையாடினார். இதையடுத்து, 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்குகளில் மரினை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து. இதன்மூலம், ரியோ ஒலிம்பிக் தோல்விக்கு மரினை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளார், சிந்து.

அதேபோல ஆடவர் பிரிவில், டென்மார்க் வீரர் அக்சல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close