Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சச்சின் இப்போ சிக்ஸர் சிங்கர்!

கிரிக்கெட் உலகில் எல்லாச் சாதனைகளையும் படைத்துவிட்ட சச்சினின் புதிய அவதாரம், சிங்கர். 

16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின், இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக ஜொலித்தார். இந்தியர்கள் பலரும் கிரிக்கெட் ரசிகர்களாக மாறியது, சச்சின் மட்டையைச் சுழற்றிய பிறகுதான். ஏன், இப்போது இந்திய அணியில் பின்னி எடுக்கும் பல வீரர்கள், சச்சினின் ரசிகர்களாக இருந்து, கிரிக்கெட் விளையாட்டுக்குத் தூண்டப்பட்டு வந்தவர்கள்தான். 

சச்சின்

கிரிக்கெட்டில் பெற்ற புகழின்மூலம், விளம்பரப் படங்களிலும் ஜொலித்தார் சச்சின். இப்போது, பிரபல பாடகர் சோனு நிஹாம் உடன் இணைந்து, ஒரு பாடலைப் பாடியுள்ளார்.  அதுதான், இன்றைய சமூக வலைதளங்களின் தெறி ஹிட்.

'நாச்சோ... நாச்சோ' எனத் தொடங்கும் 'Sachin's Cricket Wali Beat'  என்ற அந்தப் பாடலில்,  கிரிக்கெட் பற்றி துள்ளலான வார்த்தைகள், இந்திய கிரிக்கெட்  வீரர்களின் பெயர்கள்,  கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் விளாசும் அசத்தல் கிராஃபிக்ஸ் எனப் படு உற்சாகமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சோனு நிஹாம் உடன் இணைந்து சச்சின் பாடும்போது, அவர் முகத்திலும் உடல் மொழியிலும் உள்ள உற்சாகம், ஒன் டே மேட்சில்  ட்ரிபிள் செஞ்சுரியைப் பார்த்த உணர்வை அளிக்கிறது.

''இசை,  எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், பாடுவேன் என்றெல்லாம் நினைத்தில்லை. சோனு நிஹாமும்  மற்றவர்களும் இணைந்து என்னைப் பாடவைத்துள்ளனர்'' என்றும் பேசி இருக்கிறார் சச்சின்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close