Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களுள் ஒருவரான ஷ்யாம் குமார் தங்கப் பதக்கத்தினை வென்றிருக்கிறார்.

shyam

 

பாங்காக்கில் நடந்துவரும் ‘தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை’ போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்யாம் குமார் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு நடந்த சர்வதேசப் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் தஸ்மதாவ்-க்கு எதிராக விளையாடி இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல 64 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் டோகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவரும் 2015-ம் ஆண்டு நடந்த சர்வதேசப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

7 பேர் கொண்ட குழுவாக சென்ற இந்திய அணி ‘தாய்லாந்து சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close