Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. 179 ரன்கள் இலக்கை, 6 விக்கெட் இழப்புக்கு 19.5 ஓவரில் சேஸ் செய்து வெற்றிபெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி.

Mumbai Indians

ஐபிஎல் சீசனில் 7-வது போட்டி கொல்கத்தா-மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஏழு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்து வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 81 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியைச் சேர்ந்த ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்துக் களமிறங்கிய மும்பை அணியின் நித்திஷ் ராணா, 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அந்த அணி, 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close