Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல் : மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 10-வது ஆட்டம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த வார்னர், அதிகபட்சமாக 34 பந்துகளில் 49 ரன்கள் ஸ்கோர் செய்தார். இதில், 2 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். மும்பை அணியின் ஜஸ்டின் பும்ரா 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மும்பை இந்தியன்ஸ்

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, மும்பை அணி அடுத்ததாகக் களமிறங்கியது. மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் நித்திஷ் ராணா, 36 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். 18.4 ஓவரில், 6 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை, எளிதாக வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close