Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அசத்தல் வெற்றி

ஐபிஎல் தொடரின் இன்று நடந்த, 11-வது போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. கொல்கத்தாவின், ஈடன் கார்டனில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து,  முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.

Gambhir


அந்த அணியின் மில்லர் 28, வோரா 28, மேக்ஸ்வெல் 25, சாஹா 25, ஆம்லா 25 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், கம்பீர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.


சுனில் நரைன் 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் மறு முனையில் கேப்டன் கம்பீர் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு உத்தப்பா மற்றும் மணிஷ் பாண்டேவும் கைக்கொடுக்க கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


கம்பீர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அதேநேரத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வி ஆகும். மேலும், இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close