Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: பெங்களூர் - மும்பை பலப்பரீட்சை... களமிறங்கும் கோலி... கர்ஜிக்குமா பெங்களூர்..?

ஐபிஎல் தொடரின் 12 -வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. பெங்களூர் கேப்டன் விராட் கோலி காயத்திலிருந்து குணமாகி இன்று களமிறங்கவுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் அனுதினமும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தவறாது நடந்து கொண்டிருக்கிறது. அனல் பறக்கும் ஆட்டங்கள் அமர்க்களமாய் நடந்து கொண்டிருக்கையில், அதிரடிக்கு பெயர்போன இரு அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை அதிரடி ஆட்டத்தை தொடங்காத பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டன் விராட் கோலியின் வரவு அசுர பலமாய் இருக்கும். தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர், இன்று களமிறங்குகிறார். மேலும், அந்த அணி கெயில், டி வில்லியர்ஸ் என அட்டகாசமாக பேட்டிங் வரிசையுடன் களமிறங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும் சம பலத்துடன் களம் காணுகிறது. ரோகித் ஷர்மா, ராணா, பாண்டியா என உள்ளூர் அதிரடி வீரர்களை கொண்டு மும்பை கலக்கி வருகிறது. இதுவரை இரு அணிகளும் சந்தித்த 19 போட்டிகளில் மும்பை 11 வெற்றிகளும் பெங்களூர் 8 வெற்றிகளும் பெற்றுள்ளன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும் அதிரடி மன்னன் கெயிலும் களமிறங்க உள்ளனர்.   
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close