Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: குஜராத் - புனே மோதல்... தோனி சொதப்பல்... மீண்டும் ஹாட்-ட்ரிக்..!

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் புனே அணியும் குஜராத் அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, முதலில் பந்துவீசப் போவதாகக் கூறி, புனே அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

இதையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவின் குமார் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே, புனேவின் தொடக்க வீரர் ரஹானே ஸ்லிப்பில் இருக்கும் ரெய்னாவுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து, வந்த கேப்டன் ஸ்மித்தும் இன்னொரு தொடக்க வீரரான ராகுல் திரிப்பதியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். இந்தப் போட்டியிலும் தோனி 8 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும், புனே அணியின் கேப்டன் ஸ்மித்தின் 43 ரன்கள், மனோஜ் திவாரியின் 31 ரன்கள் போன்றோர்களின் பங்களிப்பால் மதிக்கத்தக்க ஸ்கோரான 171 ரன்களை எட்டியது அந்த அணி. 

முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய குஜராத் அணியின் ஆண்ட்ரூ டை, ஹாட்-ட்ரிக்  எடுத்தார். இன்று பெங்களூரு-மும்பை அணிகளுக்கு இடையில் நடந்த மற்றொரு ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணியின் சாமுவேல் பத்ரியும் ஹாட்-ட்ரிக் எடுத்தார். 

இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில், ஒரே நாளில் இரண்டு ஹாட்-ட்ரிக் எடுக்கப்பட்டது இல்லை. மேலும், ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்த இருவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக அவர்கள் விளையாடும் அணிக்காக களமிறங்கினர்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close