Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 ஹைதராபாத்- கொல்கத்தா பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் 14 -வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 

ஐபில் போட்டிகள் ஆரம்ப கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அநேக அணிகள் அனைத்தும் முதல்கட்ட போட்டிகளை முடித்துக்கொண்டு, புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் வர ஆயத்தமாகிவிட்டன. இன்று முன்னணியில் இருக்கும் அதிரடிக்கு பஞ்சமில்லாத இரு அணிகள் மோதி வருகின்றன. நடப்பு சாம்பியன்ஸ் சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரு அணிகளுமே இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இதையடுத்து, இரு அணிகளும் தங்கள் இடத்தை தக்கவைத்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் அதிரடிக்கு முழு உத்தரவாதம் உண்டு.

இதுவரை 9  போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா ஆறு வெற்றிகளும் ஹைதராபாத் மூன்று வெற்றிகளும் பெற்றுள்ளன. சன்ரைசர்ஸ் தரப்பில் வார்னர், தவான், யுவராஜ், ஹென்ரிக்ஸ் என அதிரடி பட்டாளமே இருக்கின்றது. மேலும் பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் அசத்தி வருகிறது. கொல்கத்தா அணியிலும் கம்பீர், மனிஷ் பாண்டே, உத்தப்பா என சமபலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.  கொல்கத்தாவில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீசி வருகிறது. கொல்கத்தாவில் கம்பீர், நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

நரேன் 6 ரன்னிலும் , கம்பீர் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் உத்தரப்பா- பாண்டே ஜோடி களம் இறங்கியது. உத்தப்பா 30 ரன்னிலும், பாண்டே 9 ரன்னிலும் உள்ளனர். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது.

Photo Courtesy- IPLT20

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close