Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு 173 ரன்கள் டார்கெட் 

ஐபிஎல் தொடரின் 14-வது போட்டி இன்று ஹைதராபாத், கொல்கத்தா இடையே நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்துள்ளது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா இடையிலான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் கம்பிர், சுனில் நரேன் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடத போதிலும் உத்தப்பா, மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடி ரன் குவித்துள்ளனர். உத்தப்பா 39 பந்துகளில் 68 ரன்களும், மனிஷ் பாண்டே 35 பந்துகளில் 46 ரன்களும் குவித்தனர். இதையடுத்து கொல்கத்தா 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்துள்ளது. சன்ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, ரஷீத் கான் , பென் கட்டிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஷிகர் தவான் களமிறங்கினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close