Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, இது தோனி பன்ச்!

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கிப்பட்டிருந்த சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் வரவுள்ளன. இந்த வருடத்துடன் தடை நீங்குவதால், இரு அணிகளும் அடுத்த ஆண்டு விளையாடுவர் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல்லின் முதல் தொடரை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ்.  அந்த தொடரின் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரின் தொடக்கமே இவ்விரு அணிகளுக்கும் பிரகாசமாய் தொடங்கியது. இந்நிலையில், இரு அணிகளும் சூதாட்ட புகாரில் சிக்கித் தடை செய்யப்பட்டன. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் விளையாட முடியாமல் போனது. சென்னை, ராஜஸ்தான் வீரர்களை கலந்து புனே, குஜராத் தங்களது அணிகளை உருவாக்கியது. இந்நிலையில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் திரும்பி வரப் போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தடை நீக்கப்பட்ட சென்னை அணிக்கு மீண்டும் தோனி திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

புனே அணியில் விளையாடி வரும் தோனி முதலில் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், புனே அணியின் உரிமையாளர் தோனியை அவமதிக்கும் வகையில் சில பதிவுகளையும் வெளியிட்டார். இதனிடையே மீண்டும் சென்னை அணி வரவிருப்பது, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகமளிப்பதாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்போதே சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிரடி காட்டி வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close