Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் தொடரின் 14-வது போட்டி இன்று ஹைதராபாத், கொல்கத்தா இடையே நடைபெற்றது. இதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 68 ரன்களும், மனிஷ் பாண்டே 46 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ்.

அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வார்னரும், தவானும் நிதானமாகவே விளையாடினர். வார்னர் 26 ரன்களும் தவான் 23 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 26 ரன்கள் குவித்தார். இருபது ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வென்றதன் மூலம் கொல்கத்தா ஆறு புள்ளிகளுடன் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது.

PHOTO COURTESY : IPLT20

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close