Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: மும்பை இந்தியன்ஸ்- குஜராத் லயன்ஸ் பலப்பரீட்சை

இன்று ஐபிஎல் தொடரின் 16 -வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய குஜராத் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து பலமாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது குஜராத் லயன்ஸ். மும்பை தரப்பில் க்ருனல் பாண்டியாவும், ஹர்திக் பாண்டியாவும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர். கடைசி போட்டியில் பொல்லார்ட் அதிரடி ஃபார்முக்கு திரும்பியிருப்பது மும்பைக்கு கூடுதல் பலம். குஜராத்தும் மெக்கல்லம், ஸ்மித், ரெய்னா,ஜேசன் ராய் என அதிரடி வீரர்களால் நிறைந்துள்ளது. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகள் சந்தித்துள்ளன. இரு போட்டிகளிலும் குஜராத் அணியே வென்றுள்ளது.

இந்நிலையில், இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து ஆடிய குஜராத் 176 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மெக்கல்லம் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். சுரேஷ் ரெய்னா 28 ரன்களும், தினேஷ் கார்த்திக் 48 ரன்களும் குவித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் மெக்லனெகன் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஹர்பஜன், மலிங்கா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

Photo Courtesy: IPLT20 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close