Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி!

குஜராத் லயன்ஸ் உடனான ஆட்டத்தில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி. 19 .3 ஓவர்களில் மும்பை அணி  நான்கு  விக்கெட்டுகள் இழப்புக்கு 177  ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரின் 16 -வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியைச் சந்தித்தது. டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்களின் முடிவில், குஜராத் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, மெக்கல்லம் 64 ரன்களும்  தினேஷ் கார்த்திக் 48 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே பார்திவ் பட்டேல் டக் அவுட் ஆனார். முதல் விக்கெட் வீழ்ச்சிக்குப் பின் சுதாரித்துக்கொண்டு ஆடிய மும்பை இந்தியன்ஸ், 19.3 ஓவர்களில் 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 53 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா 40  ரன்களும், பொல்லார்ட் 39 ரன்களும் குவித்தனர். விளையாடிய ஐந்து போட்டிகளில்,  4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ்.

இதையடுத்து, இன்று நடைபெற்றுவரும் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்து வீச்சைத் தேர்வுசெய்துள்ளது.

Photo Courtesy: IPL10 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close