Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூர் ஓப்பன் பேட்மின்டன்: சாய் பிரனீத் சாம்பியன்!

சிங்கப்பூர் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில், சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்றுமொரு இந்திய வீரரான கீதாம்பி ஸ்ரீகாந்தை வென்று, சாம்பியன் பட்டத்தைத்  தட்டிச்சென்றுள்ளார் அவர்.

சிங்கப்பூர் ஓப்பன் பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று, இதன் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத், தென்கொரிய வீரர் லீடான் கியுன்னை 21-6 , 21-8 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கீதாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேசிய வீரர் ஆண்டனி சினிசுகாவை 21-13, 21-14 என்ற செட்களில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, இரு இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியில் களமிறங்கினர்.

இன்று நடந்த இறுதிப் போட்டியின் முதல் செட்டை, ஸ்ரீகாந்த் 17 -21 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து விளையாடிய இரு செட்டுகளிலும், சாய் பிரனீத் வெற்றிபெற்றார். 21-17 , 21 -12 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த்தை வீழ்த்தினார் சாய் பிரனீத். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், 'அனுதினமும் பயிற்சிசெய்யும் வீரருடன் இறுதிப் போட்டியில் ஆடி வெற்றிபெறுவது எளிதல்ல. இருவரின் ஆட்டத்திறனும் ஒருவருக்கொருவர் தெரிந்திருப்பதால், மிகவும் சவாலான போட்டியாக இருந்தது. இந்த வெற்றி, எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது' எனக் கூறியுள்ளார். இதனிடையே, சாய் பிரனீத்-ஸ்ரீகாந்த் இருவரும், முன்னாள் பேட்மின்டன் வீரரான கோபிச்சந்த்தின் மாணவர்களாவர்.   

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close