Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார்.

சிக்ஸர் விளாசி ஹர்ஸ் கோயங்காவுக்கு தோனி பதிலடி

ராயல் சேலஞ்சர்சுக்கு எதிராக மீண்டும் பழைய விளாசலை தோனியிடம் பார்க்க முடிந்தது. 25 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் ஒரு இமாலய சிக்ஸரும் அடங்கும். யஸ்வேந்த்ரா சாஹல் வீசிய 14-வது ஓவரில் இறங்கி வந்து தோனி அடித்த சிக்ஸர் ஸ்டேடியத்தின் மேற்கூரையின் மேல் விழுந்தது. பந்தை எடுக்க முடியாததால், வேறு பந்தை வைத்து போட்டியை தொடர வேண்டியதாகி விட்டது. நேற்றைய ஆட்டத்துடன், தோனி எல்லாவிதமான போட்டிகளிலும் சேர்த்து 24 ஆயிரம் ரன்களைக் கடந்தும் சாதனை படைத்துள்ளார். 

அதுமட்டுமல்ல, முக்கியமான நேரத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டான ஏபி டிவில்லியர்ஸை தோனி மின்னல் வேகத்தில் 'ஸ்டம்பிங்' செய்தது செம. ஏபிடியை 29 ரன்களில் வெளியேற்றியதும் புனே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆக, நேற்று பழைய பன்னீர்செல்வமாக மாறிய தோனியை பார்க்க முடிந்தது. தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. தோனியை உதாசினப்படுத்திய புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவை ட்வீட்டரில் செமயாக கலாய்த்துள்ளனர். 

கோயங்கா ட்வீட்

'தோனி அடித்த சிக்ஸ் ஹர்ஷ் கோயங்காவின் வீட்டில் போய் விழுந்தது' என்கிறது ஒரு ட்வீட். 'பந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு போய் விட்டது' என மற்றொரு ட்வீட். 'தோனி அடித்த பந்து கோயங்கா சகோதரர்களின் முகத்தில் விழுந்தது' என்கிறது இன்னொரு ட்வீட். தோனியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு மென்சன் செய்து திட்டித்தீர்த்து வருகின்றனர். வேறு வழியில்லாம் அவர்களை பிளாக் செய்து வருகிறார் ஹர்ஷ் கோயங்கா. 

தோனி ரசிகர்களின் ஹர்ஷ் கோயங்கா மீதான கோபத்துக்கு எக்கச்சக்க காரணங்கள். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன், புனே அணி தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியின் மூன்று வகையான ஃபார்மட்களின் கேப்டன் பொறுப்பிலும் இருந்தும் தோனி விலகி விட்டார். ஐபிஎல் தொடரில் மட்டும்தான் கேப்டனாக இருந்தார். அதுவும் பறிக்கப்பட்டது அவரது ரசிகர்களை என்னவோ செய்தது. தோனிக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் புனே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனை,அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. இளம் வீரர் ஒருவரின் கையில் அணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது' என தோனியின் ரசிகர்கள் கருதினர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரு போட்டிகளில் தோனி சரியாக விளையாடவில்லை. இதையடுத்து ஹர்ஷ் கோய்ங்கா, தோனியை அவமதிக்கும் வகையில் சில ட்வீட்களை பதிவிட்டார்.  இது தோனியின் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கவும் தவறவில்லை.  'மிஸ்டர் கோயங்கா, உங்களாலோ அல்லது ஸ்மித்தாலோ புனே அணிக்கு இவ்வளவு ரசிகர்கள் உருவாகிவிடவில்லை. தோனியால் மட்டுமே உங்கள் அணிக்கு ரசிகர் வட்டம் உருவாக்கியிருக்கிறது' என்றும் 'நாடே அவரை ஹீரோவா கருதுகிறது; யாரை யாருடன் ஒப்பிட வேண்டுமென்ற விவஸ்தை உங்களுக்கு இல்லை' எனவும் 'தோனி சரியாக விளையாடவில்லை என்றால் அவரை அணியில் ஏன் வைத்திருக்கிறீர்கள்...' எனவும் கோயங்காவிடம் காட்டமாக கேள்வி எழுப்பினர். 

கோயங்காவுக்கு சாக் ஷி பதிலடி ட்வீட்

ஹர்ஸ் கோயங்காவின் ட்வீட்டுக்கு 'கேப்டன் கூல்' எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக, வேறு ஒருவரிடத்தில் இருந்து ஹர்ஷ் கோயங்காவுக்கு செமத்தியான பதில் வந்தது. அவர் வேறு யாருமல்ல தோனியின் மனைவி சாக்ஷிதான்.சாக்ஷி  'கர்மா' ட்வீட் செய்த அடுத்த நாளே பி.சி.சி.ஐயிடம் இருந்து சென்னை அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. சூதாட்டப் புகார் காரணமாக இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட சென்னை அணி 2018ம் ஆண்டு, ஐ.பி.எல் தொடரில் மீண்டும் கலந்து கொள்வதற்கான பாசிடிவ் மெசேஜ் அது. 

கோயங்காவுக்கு தோனி ரசிகர்கள் பதிலடி

சென்னை, ராஜஸ்தான் அணிகள் சூதாட்டப் புகாரில் சிக்கவில்லையென்றால், புதிய அணிகள் உருவாகியும் இருக்காது. ஹர்ஷ் கோயங்கா போன்றவர்கள் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களாகவும் ஆகியிருக்க மாட்டார்கள். தற்போது, சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்குவதால், குஜராத், புனே அணிகள் தொடரை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியிருக்கிறது. 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கலாம் என்று விதி கொண்டு வந்தால் மட்டுமே குஜராத், புனே அணிகள் பங்கேற்க முடியும்.

-எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close