Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 169 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தெர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்ஜு சாம்சன் 39 ரன்களும், ரிஷப் பந்த் 38 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் கவுல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையிலும் மனிஷ் பாண்டே - யூசுப் பதான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற செய்துள்ளனர். மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 69 ரன்களும், யூசுப் பதான் 39 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுகளுக்கு 100 ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து 8 புள்ளிகளுடன் கொல்கத்தா முதலிடத்திலும், 4 புள்ளிகளுடன் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன.

Photo Courtesy- IPLT20

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close