Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: கடைசி ஓவர் வரை சென்ற ஐபிஎல் போட்டி... ஹைதராபாத் த்ரில் வெற்றி!

விறுவிறுப்பாக நடந்து வரும் ஐபிஎல் 10-வது சீசனின் 19-வது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும் ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி, கொடுக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்தின் கேப்டன் டேவிட் வார்னர் 54 பந்துகளுக்கு 70 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி சார்பில் மோகித் ஷர்மா மற்றும் அக்சார் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பஞ்சாப். தொடக்க வீரரான மணன் வோரா அதிரடியாக விளையாடி 50 பந்துகளுக்கு 95 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்குப் பக்கத்தில் இட்டுச் சென்றார். ஆனால், அவரைத் தவிர பஞ்சாப் அணியில் இருக்கும் வேறு எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து ஆடவில்லை. இதனால், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இதையடுத்து பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

நன்றி: IPL
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close