Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: பெங்களூர் 213 ரன்கள் குவிப்பு. கெயில், கோலி அதிரடி!

இன்று, ஐபிஎல் தொடரின் 20-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய பெங்களூர் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.

rcb

ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து, பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராத் கோலி, கிரிஸ் கெயில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. கெயில்-கோலி ஜோடி 10-வது முறையாக 100 ரன்கள் குவித்தது.விராத் கோலி 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்துள்ளார். ஒருபுறம் விராத் கோலி நிதானமாக விளையாட, அதிரடி மன்னன் கெயில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

தனது பழைய ஃபார்மில் அதிரடியாக விளையாடிய கெயில், 38 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில், 7 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.மேலும், கெயில் 38 ரன்களில் இருந்தபோதே, மெக்கல்லத்தின் அசாதரணமான கேட்ச்சில் பிடிபட்டார். ஆனால் அவரின் தொப்பி, பவுண்டரி லைனில் பட்டதால் அதுவும் சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளில் முதல் நபராக 10,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் கெயில். இதில், 44 சதவிகித ரன்கள் சிக்ஸர்களால் குவிக்கப்பட்டவை.

குஜாராத் தரப்பில் குல்கர்னி, தம்பி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து, 214 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்குகிறது குஜராத் லயன்ஸ்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close