Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெயில், கோலி அதிரடி: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி!

ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய விராத் கோலி, கிரிஸ் கெயில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. கெயில் - கோலி ஜோடி, 10-வது முறையாக 100 ரன்கள் குவித்தது. விராத் கோலி 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். ஒருபுறம் விராத் கோலி நிதானமாக விளையாட, அதிரடி மன்னன் கெயில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

RCB

தனது பழைய ஃபார்மில் அதிரடியாக விளையாடிய கெயில், 38 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில், 7 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.மேலும், கெயில் 38 ரன்களில் இருந்தபோதே, மெக்கல்லத்தின் அசாதாரணமான கேட்ச்சில் பிடிபட்டார். ஆனால், அவரின் தொப்பி, பவுண்டரி லைனில் பட்டதால், அதுவும் சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. டி20 போட்டிகளில் முதல் நபராக 10,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் கெயில். இதில், 44 சதவிகித ரன்கள் சிக்ஸர்களால் குவிக்கப்பட்டவை.

குஜாராத் தரப்பில் குல்கர்னி, தம்பி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 214 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, கடுமையாக போராடியது. அந்த அணியின் மெக்குலம் அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 16 பந்துகளில் 39 ரன் அடித்து, தனது அதிரடியை காட்டினார். ஆனால் மற்ற வீரர்கள், சோபிக்கவில்லை. 
இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், பெங்களூர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில், அதிரடி வெற்றி பெற்றது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது வெற்றி. 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணிக்கு இது நான்காவது தோல்வி. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close