Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: ஹைதராபாத் அதிரடி... போராடித் தோல்வியடைந்தது டெல்லி!

ஐபிஎல் 10 தொடரின் 21-வது போட்டி ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி அணிக்கும் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும் இடையில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற டேவிட் வார்னர், முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்து, ஹைதராபாத்தின் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஷிகர் தவானும், மூன்றாவது பேட்ஸ்மேனாக இறங்கிய கேன் வில்லியம்சனும் அதிரடியாக விளையாடினர். வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 89 ரன்களும், தவான் 50 பந்துகளுக்கு 70 ரன்களும் குவித்தனர். இதனால் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு இமாலய ஸ்கோரான 191 ரன்களை எட்டியது.

இதைத் தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியிலும் சஞ்சு சாம்சன், கருண் நாயர், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் போன்றவர்கள் அதிரடியாக விளையாடினர். இருந்தும், அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின்மூலம், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, ஹைதராபாத் அணி. 

நன்றி: IPL

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close