Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: அம்லா சதம் வீண்... பஞ்சாப் தோல்வி... மும்பை இந்தியன்ஸ் அதிரடி!

ஐபிஎல் 10-வது சீசனின் 22-வது போட்டி, இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், க்ளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி, பஞ்சாபை பேட்டிங் செய்யச்சொல்லி பணித்தது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதிரடிகாட்டியது. இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை சோபிக்காத தென் ஆப்ரிக்கா அணியின் அசீம் அம்லா, 60 பந்துகளில் 104 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடிக்க வித்திட்டார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல், 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி, 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது மும்பை. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான பார்த்திவ் படேல், ஜோஸ் பட்ளர்  மற்றும் நிதிஷ் ரானா முறையே 37, 77, 62 ரன்கள் குவித்தனர். இதனால், 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை 16-வது ஓவரிலேயே எட்டிப் பிடித்தது மும்பை அணி.

இந்தப் போட்டியில் வெற்றியடைந்ததன்மூலம், புள்ளிகள் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது மும்பை. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close