Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தப்பா அதிரடி.. குஜராத் அணிக்கு 188 ரன்கள் டார்கெட்

 

10-வது ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. சொந்த ஊர் என்பதால் கொல்கத்தா அணிக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுனில் நரைன் 42 ரன்களும், கவுதம் காம்பீர் 33 ரன்களும் குவித்து சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அடுத்த களமிறங்கிய ராபின் உத்தப்பாவும் அதிரடி காட்டினார். உத்தப்பா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 72 ரன்களைக் குவித்தார். கொல்கத்தா ஐந்து போட்டிகளில் விளையாடி, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் குஜராத் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close