Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட குஜராத்... ரய்னா அதிரடி... கொல்கத்தா தோல்வி!

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஐபிஎல் 10-வது சீசனின் 23-வது போட்டி, கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் சுரேஷ் ரய்னா தலைமையிலான குஜராத் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னால் குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. எனவே, மீண்டும் தோல்வியடைந்தால் அறை இறுதி வாய்ப்பு கனவாக மட்டுமே இருக்கும் என்பதை நன்கு அறிந்து களமிறங்கியது அந்த அணி. அதே வேலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடலாம் என்ற முனைப்போடு இருந்தது கொல்கத்தா. 

போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரய்னா, முதலில் பந்தவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது கொல்கத்தா. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான சுனில் நரேன், கம்பீர் மற்றும் உத்தப்பா ஆகியோர் முறையே 42, 33 மற்றும் 72 ரன்கள் குவித்தனர். இவர்கள் மூவரின் ஆட்டம் மூலம், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் 15 பந்துகளில் 31 ரன்களும் மெக்கலம் 17 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து அணியின் சேசிங்குக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்தும் எண்ணத்தில் களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ரய்னா, ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர், 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து குஜராத் அணி 188 ரன்களை சேஸ் செய்ய உறுதுணையாக இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குஜராத் 19-வது ஓவரிலேயே எட்டிப் பிடித்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

நன்றி: IPL

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close