Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#RPSvSRH 'தோனி இஸ் பேக்': ஹைதராபாத் அணியை சாய்த்தது புனே!

ஐபிஎல் போட்டியில், இன்று முதலில் புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் புனே-ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

Dhoni

சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 55 ரன்கள் குவித்தார். டேவிட் வார்னர் 43 ரன்களும்  ஷிகர் தவான் 30 ரன்களும் குவித்தனர். புனே தரப்பில் உனத்கட், இம்ரான் தாஹிர், கிரிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  குறிப்பாக, புனே அணியில் களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார்.

இதையடுத்து, களமிறங்கிய புனே அணி , இன்னிங்ஸை மெதுவாக துவங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ராகுல் திருப்பதி 59 ரன்கள் அடித்தார். ரஹானே 2, கேப்டன் ஸ்மித் 27, ஸ்டோக்ஸ் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆரம்பத்தில் அவர் பொறுமையாக ஆடவே, சமூகவலைதளங்களில், தோனியை ட்ரோல் செய்து ஸ்டேட்டஸ் தட்டினர்.

பின், ஒரு கட்டத்தில் தோனி விஷ்வரூபம் எடுத்தார். பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு, பழைய பன்னீர்செல்வமாக மாறி அரை சதம் அடித்தார். குறிப்பாக கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட போது, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி வின்னிங் ஷாட் அடித்தார் தோனி. 
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில், புனே அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணிக்கு இது மூன்றாவது வெற்றி. ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணிக்கு இது மூன்றாவது தோல்வி. இதைத் தொடர்ந்து இன்று நடக்கவுள்ள மற்றொரு போட்டியில், டெல்லி, மும்பை அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close