Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10 - வெறும் 49 ரன்களுக்குள் கோலி தலைமையிலான பெங்களூரு அணியைச் சுருட்டியது கொல்கத்தா

விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத ஐபிஎல் 10-வது சீசனின் 27-வது போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சைசெய்தன.

போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி,  பௌலிங் செய்யத் தீர்மானித்து, கொல்கத்தாவை பேட்டிங் செய்யச் சொல்லிப் பணித்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுனில் நரேன், 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஆனால், கொல்கத்தாவில் அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சோபிக்கவில்லை. ஆதலால், 19.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி சார்பில்,  சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி. ஆனால், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கிறிஸ் கெய்ல், விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்பட எவருமே ஒற்றை இலக்கு ரன்னைத் தாண்டாததால், 49 ரன்கள் எடுத்திருந்தபோது 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 

பெங்களூர், இந்தப் போட்டியில் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோரை பதிவுசெய்துள்ளது.

மேலும், புள்ளிகள் பட்டியலிலும் அந்த அணி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close