Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPl10: 182 ரன்கள் குவித்தது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்! ஸ்மித் கலக்கல்!

30-வது ஐபிஎல் போட்டியில் இன்று, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய புனே அணி, 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்துள்ளது.

pune

இன்று, ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் புனேவில் நடைபெறுகிறது. புனே-கொல்கத்தா அணிகள் மோதும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, களமிறங்கிய புனே அணி, 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்துள்ளது.

புனே அணியில், அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 51  ரன்களும் ரஹானே 46  ரன்களும் குவித்துள்ளனர். இரண்டு சிக்ஸர்கள் விளாசிய தோனி, 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ், சுனில் நரேன், பியூஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும்  வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து, 183 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்குகிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். புள்ளிகள் தர வரிசையில் தற்போது,10 புள்ளிகளுடன் கொல்கத்தா 2-வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் புனே 4-வது இடத்திலும் உள்ளன.

Photo Courtesy : IPLT20
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close