Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல்-லில் இன்ஸ்விங் வீச ரெடியாகிறார் இர்ஃபான் பதான் #IPL10

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில், இர்ஃபான் பதானை எந்த அணி உரிமையாளரும் எடுக்கவில்லை.  திறமையான வேகப்பந்து ஆல் ரவுண்டரை எந்தக் காரணத்துக்காகப் புறக்கணிக்கிறார்கள் என அப்போதே சலசலப்பு எழுந்தது. தன்னைத் தேர்ந்தெடுக்காததால், மிகவும் சோகத்தில் இருந்தார் பதான். இப்போது அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசியிருக்கிறது. 

இர்பான் பதான்

குஜராத் அணிக்காக ஆடிவரும் டுவைன் பிராவோ காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதல் பாதி ஐபிஎல்-லில் பங்கேற்க முடியாவிடில் கூட பிற்பாதியில் இவர்  நிச்சயம் பங்கேற்பார் என குஜராத் அணியின் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதற்கேற்றபடி சிறு சிறு பயிற்சிகளையும் செய்ய ஆரம்பித்திருந்தார், பிராவோ. ஆனால், அவருக்கு காயம் குணமடையாததால், மருத்துவர்கள் மேலும் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, இந்த ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார் பிராவோ. 

ஏற்கெனவே பிராவோ இல்லாததால் தடுமாறிவரும் குஜராத் அணி, இந்தச் செய்தியால் உற்சாகமிழந்தது. இந்த நிலையில், பிராவோவுக்குப் பதிலாக இர்ஃபான் பதானை அழைத்திருக்கிறது, அணி நிர்வாகம். இதை,  பதான் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். குஜராத் அணியில், உள்ளூர் பௌலர்கள் சொதப்பி வரும் நிலையில், பதானின் வருகை  அணிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close