Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். 

இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந்த அன்சாரி திடீரென்று ஓய்வு பெறுவதாக கூறியிருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.

ஓய்வு முடிவு ஏன் என்பது குறித்து அன்சாரி கூறுகையில், '20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். ஏழு ஆண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட் வீரராக வலம் வந்தேன். தற்போது என் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளேன். தற்போது நான் இந்த முடிவு எடுத்திருப்பது ஆச்சர்யத்தைத் தந்தாலும், கிரிக்கெட் என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதை நான் முதலில் இருந்தே தெளிவாக இருந்தேன். கிரிக்கெட் தவிர்த்து என் வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனவே, அடுத்ததாக சட்டத்துறையில் நுழைய எண்ணம் உள்ளது. அதில் சாதிக்க இப்போதில் இருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close