Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

13.5 ஓவர்களிலேயே மேட்சை முடித்தது குஜராத். கோலி அணி படுதோல்வி.

ஐபிஎல் தொடரின் 31-வது போட்டி, இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. 

குஜராத் வெற்றி

டாஸ் வென்ற ரெய்னா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியும் பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவதாகவே அமைந்தது. கோலி, டிவில்லியர்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேதர், லேசாக அதிரடி காட்டினார். ஆனாலும் அதிக ரன்களைக் குவிக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ் அணியைக் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, மன்தீப் சிங்குடன் புரிதலின்மை காரணமாக, ஐந்தே ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். நெகி சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசியதால், பெங்களூரு நூறு ரன்களைத் தாண்ட முடிந்தது. 

குஜராத் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மெக்குல்லம், இஷான் கிஷன் அடுத்தடுத்து அவுட் ஆனாலும், ஆரோன் பின்ச் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ஆடி,  22 பந்தில் அரை சதம் எடுத்து அணியைத் தலைநிமிரவைத்தார். ரெய்னா 30 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். 13.5 ஓவர்களிலே  இலக்கை சேஸிங் செய்தது, குஜராத் லயன்ஸ். இந்த வெற்றியால், ஆறாவது  இடத்துக்கு முன்னேறியிருக்கிறது, குஜராத். பெங்களூரு படுதோல்வி அடைந்ததால், பிளே ஆஃப் வாய்ப்புக் கனவு, கிட்டத்தட்ட முடிந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close