Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 161 ரன்கள் டார்கெட் #KKRvDD

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவின்  ஈடன் கார்டனில் இன்று நடக்கும் முதல் போட்டியில், கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பௌலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி தரப்பில், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவர் மட்டுமே, சிறப்பாக ஆடினர்.

சாம்சன் 60, ஸ்ரேயாஸ் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, டாப் நான்கு வீரர்கள் எல்.பி.டபுள்யு முறையில் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

KKR


கொல்கத்தா அணியின் நாதன் கல்டர் நில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், கொல்கத்தா அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில், இதுவரை விளையாடியுள்ள எட்டுப் போட்டிகளில், ஆறு போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணி ஆறுப் போட்டிகளில் விளையாடி, நான்குப் போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close