Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்கத்தா மீண்டும் அதிரடி : டெல்லி அணிக்கு ஐந்தாவது தோல்வி #KKRvDD

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்நிலையில், கொல்கத்தாவின்  ஈடன் கார்டனில் இன்று நடந்த முதல் போட்டியில், கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பௌலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி தரப்பில், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர்.

Gambir


சாம்சன் 60, ஸ்ரேயாஸ் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, டாப் நான்கு வீரர்கள் எல்.பி.டபுள்யு முறையில் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.


இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, கொல்கத்தா அணியின் சுனில் நரைன்  நான்கு ரன்களில் பெலிவியன் திரும்பினார். ஆனால், கம்பீர், உத்தப்பா நிலைத்து நின்று ஆடி, அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இருவரும் அதிரடி காட்டியதால், கொல்கத்தா அணி 16.2 ஓவர்களிலேயே 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


கம்பீர் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பா 59 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் ரபாடா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்றைய மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் மூலம், கம்பீர் மீண்டும் ஆரஞ்ச் கேப்பை தன் வசப்படுத்தினார். புள்ளிப்பட்டியலில், கொல்கத்தா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close