Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைதராபாத் அதிரடி... சரவெடி... பஞ்சாப் அணிக்கு 208 ரன்கள் டார்கெட் #KXIPvSRH

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது.

srh

ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் மொதும் ஐபிஎல் தொடரின் 30-வது போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி இருவது ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். மேலும் 4 சிக்ஸர்கள் விளாசிய டேவிட் வார்னர் 51 ரன்களும் கேன் வில்லியம்சன் 54 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், மோஹித் ஷர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரன்கள் 208 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்குகிறது பஞ்சாப் அணி. தற்போது ஒன்பது புள்ளிகளுடன் ஹைதராபாத் 3-வது இடத்திலும் ஆறு புள்ளிகளுடன் பஞ்சாப் 5-வது இடத்திலும் உள்ளன.

Phto Courtesy: IPLT20
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close