Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPl10: 67 ரன்களுக்குள் சுருண்ட டெல்லி!

இன்று ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய டெல்லி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

delhi

ஐபிஎல் தொடரின் 36-வது போட்டி இன்று மொஹாலியில் நடக்கிறது. டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்களின் முடிவில் 67 ரன்களுக்கு சுருண்டுள்ளது. இதையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியுள்ளது பஞ்சாப். 

டெல்லி அணியில் அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 18 ரன்களும், கருண் நாயர், ரபடா தலா 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களே குவித்தனர். பஞ்சாப் தரப்பில் சந்தீப் ஷர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்ஸர் பட்டேல், வருண் ஆரோன் தலா 2 விக்கெட்டுகளும் மோஹித் ஷர்மா, மெக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  ஐபிஎல் வரலாற்றில் டெல்லி 100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 8-வது முறையாகும்.

Photo Courtesy: IPLT20

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close