Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#SRHvKKR சொந்த மண்ணில் கெத்து காட்டிய ஹைதராபாத் அணி!

 

ஐபிஎல் 10-வது சீசன், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடந்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டி ஹைதராபாத்தில் நடந்தததால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அந்த அணி ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது.

 

Warner

 


அதிலும் குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 59 பந்துகளில்126 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்! இவருக்குப் பக்கபலமாக ஆடிய வில்லியம்சன் 40 ரன்களும், தவான் 29 ரன்களையும் குவித்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 210 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.


துவக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் 1, கவுதம் கம்பீர் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, அந்த அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு, ஆட்டம் மீண்டும் துவங்கியது. உத்தப்பா 53 ரன்கள் எடுத்து ஆறுதல் தர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி, கொல்கத்தாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


கொல்கத்தா அணி, நடப்புத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி, அதில் 7-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, 6-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close