Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புனே வெற்றி... கொல்கத்தா தோல்வி... மும்பை ஹேப்பி!

ஐபிஎல் 10-வது சீசனில் இன்று நடந்த போட்டியில்... கொல்கத்தா,  புனே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம் 36,  சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்தனர். 

Tripathi


புனே அணியின் வாஷிங்டன் சுந்தர், உனாட்கட் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த நிலையில், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் புனே அணி களமிறங்கியது.  தொடக்கம் முதலே அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் திரிபாதி நிதானமாக ஆடி, மேட்சை புனே பக்கம் திருப்பினார்.

அதிரடியாக ஆடிய அவர், 52 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்தார். 19.2 ஓவர்களில், புனே அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், புனே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


இது, கொல்கத்தா அணி தொடர்ந்து சந்திக்கும் இரண்டாவது தோல்வியாகும். இந்தத் தோல்விமூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து  இரண்டாவது இடத்துக்கு இறங்கியுள்ளது. புனே அணி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.  மும்பை அணி, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close