Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நல்லவேளை, இவர்கள் என் பேட்டிங்கை பார்க்கவில்லை...!' - யாருக்கு சொல்கிறார் டிராவிட்?

Rahul Dravid

நேற்று ஐபிஎல்-10 வது சீசனின் 42-வது போட்டியில் ரெய்னா தலைமையிலான குஜராத் அணியும், கருண் நாயர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை செய்தன. ஐபிஎல் லீக் ஆட்டங்கள் இன்னும் சில நாள்களில் முடியவுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் முழு பலத்தை பிரயோகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி அரைச்சதம் அடித்து, டெல்லி அணி பவுலர்களின் பந்துகளை நாலா புறமும் தெறிக்கவிட்டனர்.

இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்கை நோக்கி இன்னிங்ஸை ஆரம்பித்தது டெல்லி. முதல் விக்கெட்டுக்குப் பின் அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் மற்றும் ஒன்-டவுன் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து 63 பந்துகளில் 143 ரன்கள் அடித்தனர். இதில் பன்ட், 43 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களுடன் டெல்லி அணியின் பயிற்சியாளரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் செய்தியாளருக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அந்தப் பேட்டியின் போது டிராவிட்,  'நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் அதிகமானதை இவர்கள் பார்க்கவில்லை என்பதில் எனக்கு சந்தோஷம். ஏனென்றால், 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுக்க வேண்டும் என்னும் நிலை இருக்கும்போது, என் பேட்டிங் ஸ்டைல் வேலைக்கு ஆகாது' என்று கிண்டலாகச் சொன்னார். 

அவர் மேலும், சாம்சன் மற்றும் பன்ட் ஆகியோரை புகழ்ந்து தள்ளினார், 'இவர்கள் விளையாடியதில் மிகவும் ஆச்சரியப்படுத்தியது, தன் ஆட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றியைப் பற்றி கவனம் செலுத்தியதுதான். பன்ட், அவரது விக்கெட் பற்றியோ, சதம் அடிக்க வேண்டும் என்பது பற்றியோ கவலைப்படவில்லை. அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே அவரின் முழுக் கவனமும் இருந்தது. ஆனால், அடுத்த முறை இப்படிப்பட்ட இமாலய ஸ்கோரை சேஸ் செய்யும்போது, அணியை வெற்றி இலக்கைத் தாண்ட வைக்கும் வரை விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். 

நன்றி: IPL
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close