Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: தோனி கடைசிக்கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே

இன்று ஐபிஎல் 44-வது போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய புனே 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

pune

ஐபிஎல் தொடரின் 44-வது போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. புனே - ஹைதராபாத் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.புனே அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களும் குவித்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 31 ரன்கள் குவித்தார்.

சன்ரைசர்ஸ் தரப்பில் கவுல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான், பிபுல் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். புனே மற்றும் ஹைதராபாத் அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் இருப்பதால் இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

Photo Courtesy: IPLT20
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close