Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#DDvMI 146 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இமாலய வெற்றி!

 

 

ஐபிஎல் -10 தொடரின் 45-வது போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து, 212 ரன்களைக் குவித்தது! அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ், 43 பந்துகளில் 66 ரன்களும், கெய்ரொன் பொல்லார்ட் 35 பந்துகளில் 63 ரன்களும் அடித்தனர். ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா,1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன், 14 பந்துகளில் 29 ரன்களை விளாசினார்!  

 

 

டெல்லி தரப்பில் ரபாடா, ஆண்டர்சன், மிஷ்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, துவக்கமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதன் பின்பு தனது விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் இழந்தது டெல்லி; இதனால் 13.4 ஓவர்களிலேயே 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 146 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது! மும்பை சார்பில் ஹர்பஜன் சிங், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மலிங்கா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இத்தொடரின் 9-வது வெற்றியைச் சுவைத்துள்ள மும்பை இந்தியன்ஸ், முதல் அணியாக ப்ளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close