Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: ட்ராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம்... 158 ரன்கள் குவித்தது பெங்களூர்

ஐன்று ஐ.பி.எல் 46-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய பெங்களூர் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

rcb

ஐபிஎல் 46-வது போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது. பெங்களூர் தரப்பில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 47 பந்துகளீல் 75 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். மந்தீப் சிங் 52 ரன்கள் குவித்தார்.

கெயில், கோலி, டி வில்லியர்ஸ் இந்த போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 159 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது கொல்கத்தா. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலமே கொல்கத்தா தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: IPLT20

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close